/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்
மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்
மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்
மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்

அற்றில் சிக்கும் வாகனம்
எம். ராஜேந்திரன், கோம்பைப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர்,கே.அய்யாபட்டி:கே.அய்யாபட்டியில் வசிக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல சாலை வசதி இன்றி தவித்து வருகிறோம். ஒருவர் இறந்தால் ஒவ்வொரு முறையும் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு ஆற்றிலுள்ள மேடு பள்ளங்களை சரி செய்து அதன் பின் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
டவர் அமைக்க நடவடிக்கை
சி.ஆர். ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர், கோம்பைப்பட்டி :ஒன்றிய நிதியிலிருந்து அய்யாபட்டி ஜே.ஜே நகர் பகுதியில் 150 மீட்டருக்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
தட்டுப்பாடின்றி தண்ணீர் சப்ளை
கா.தமிழரசி, ஊராட்சி தலைவர், கோம்பைப்பட்டி:ஊராட்சி பகுதியில் நிலவிய கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு புதிய போர்வெல்கள், குடிநீர் பைப் அமைத்து தண்ணீர் தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. பள்ளி கட்டடம் கட்டியது,விரைவில் பணிகள்தொடங்கும்.கே.அய்யாபட்டி அய்யனார் கோவில் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.கே.அய்யாபட்டி மயானத்திற்கு சாலை அமைப்பது குறித்து ஊராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றி வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அதற்கான நிதியை பெற்று சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.