ADDED : ஜன 11, 2024 05:02 AM
கொடைரோடு, : அம்மையநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 3,4,5ம் வகுப்பு கட்டடங்களின் கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது.
காலை மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்கின்ற போது கூரை விழுந்து தெரிந்தது. அதிக மழை பெய்தும் நேற்று முன்தினமும் பள்ளி நடந்தது. அந்த நேரத்தில் பகலில் கூரை இடிந்து விழுந்து இருந்தால் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கும். யாருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் இரவில் கூரை விழுந்ததால் மாணவர்கள் காயம் இன்றி தப்பினர்.
பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் கூறியதாவது, 10 ஆண்டுகளாக பழுது அடைந்த கட்டடத்தை மாற்றி தர வேண்டுமென ஒன்றிய நிர்வாகத்திடம் மனுவுக்கு மேல் மனு கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது என்றார்.