/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ புடலங்காய் விலை மூன்று மடங்கு உயர்வு புடலங்காய் விலை மூன்று மடங்கு உயர்வு
புடலங்காய் விலை மூன்று மடங்கு உயர்வு
புடலங்காய் விலை மூன்று மடங்கு உயர்வு
புடலங்காய் விலை மூன்று மடங்கு உயர்வு
ADDED : ஜூன் 14, 2025 06:14 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை தேவத்துார், கொத்தையம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் புடலங்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வரை அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.9க்கு விற்றது.
மழை காரணமாக மகசூல் குறைந்ததால் வரத்து குறைய தொடங்கியது. இதனால் விலை மூன்றே வாரங்களில் மும்மடங்கு அதிகரித்து கிலோ ரூ.27க்கு விற்பனை ஆனது.