/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்
குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்
குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்
குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்

ஆக்கிரமிப்பில் திடல்
சசிக்குமார், வணிகம் : அப்சர்வேட்டரி பகுதியில் குண்டாறு குடிநீர் திட்டத்திற்கு பைப் லைன் அமைக்க குழாய்கள் குவித்து 5 ஆண்டுகளாகியும் அகற்றாமல் விஷ ஜந்துக்கள் வசிக்கும் குடியிருப்பாக மாறியுள்ளது. அருகில் குடியிருப்பு, கோயில் உள்ளதால் அச்சுறுத்தலாக உள்ளது. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடல் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. தெரு நாய்,குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது.
குடிமகன்கள் தொல்லை
முருகன், நில வணிகர் : ரிவர் சைடு தெருவில் குடிமகன்கள் தொல்லை அதிகரித்து இவர்கள் விட்டு செல்லும் உணவு, மதுபாட்டிலால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. எப்போதும் காட்டு மாடு நடமாட்டம் இருப்பதால் அச்சுறுத்துலுடன் நடமாடும் நிலை உள்ளது. 10 ஆண்டுகளாக ரிவர்சைடு பகுதியில் ரோடு சீரமைக்காமலும், சாக்கடை வசதியின்றி உள்ளது. பெய்ரி பால்ஸ் ரோடு சீரமைக்காமல் வாகன ஓட்டிகள், மாணவர்கள் தடுமாறும் நிலை உள்ளது, செல்லப்புரம் பகுதி குடிநீர் வரும் பாதையில் குப்பை அள்ளாமல் குடிநீர் மாசடைந்து வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
சரவணன், விவசாயம் : ரோஜா பூங்கா பகுதியில் நெடுஞ்சாலை பகுதியை ஆக்கிரமித்து ஏராளமான ரோட்டோர கடைகள் வைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குப்பை அகற்றப்படும்
கலாவதி, கவுன்சிலர் (தி.மு.க.): ரூ. ஒன்றை கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


