/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள் பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள்
பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள்
பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள்
பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள்

புதுப்பிக்காத ரோடு
ஜவஹர், விவேகானந்தா நகர்: பாதாள சாக்கடைக்கு வரி வசூலிக்கின்றனர். ஆனால் முறையாக இணைப்பு கொடுக்காததால் கழிவுநீரை வெளியேற்றுவதில் சிரமம் நீடிக்கிறது. மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மழைக்காலத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பகல், இரவில் கொசுக்கள் மொய்க்கிறது. பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக ரோட்டை தோண்டியவர்கள் மீண்டும் அதை புதுப்பித்து தரவில்லை.
நோய் தொற்றுக்கு வழி
குமரன், அண்ணா நகர் : கொசு மருந்துகள் அடிப்பதும் குறைவாக இருப்பதால் கொசுக்கள் வாயிலாக நோய் தொற்றுகள் பரவுகிறது. கால்நடைகள் தாராளமாக சுற்றுவதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சாக்கடைகள் தரமற்ற முறையில் இருப்பதால் மழை நேரங்களில் கழிவுநீர் ரோடுகளில் ஆறுகளாக ஓடுகிறது.
எந் த பலனு மில்லை
தனபாலன், கவுன்சிலர் ( பா.ஜ.,): ஒவ்வொரு கூட்டத்தில் வெறும் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. அதற்கான தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் மெத்தனப் போக்கோடு நடந்துகொள்கிறார்கள். மக்கள் பிரச்னைகளுக்கு மதிப்பளித்து, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். பாதாளச்சாக்கடை இணைப்பு குறித்து பலமுறை முறையிட்டும் எந்த பலனுமில்லை என்றார்.