ADDED : மார் 23, 2025 04:00 AM
நிலக்கோட்டை : மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சி பாத்திமா நகரில் தண்ணீர் பொதுக் குழாய்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தனி இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் பற்றாக்குறையானது. ஆத்திரமடைந்த மக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சி செயலாளர் ஒருவருக்கு மட்டும் தண்ணீர் வழங்கி பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விட்டார். கிராம மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் என கோரினர். பி.டி.ஓ., பஞ்சவர்ணம் ஊராட்சி செயலாளரை எச்சரிக்க கலைந்து சென்றனர்.