/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கவர்னர் குறித்து முதல்வர் கூறுவது தவறான கருத்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கவர்னர் குறித்து முதல்வர் கூறுவது தவறான கருத்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
கவர்னர் குறித்து முதல்வர் கூறுவது தவறான கருத்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
கவர்னர் குறித்து முதல்வர் கூறுவது தவறான கருத்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
கவர்னர் குறித்து முதல்வர் கூறுவது தவறான கருத்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
ADDED : ஜூன் 04, 2025 02:28 AM
திண்டுக்கல்:''தி.மு.க., ஆட்சி வரும்போதெல்லாம் காவல்துறை தி.மு.க.,வின் ஏவல் துறையாக மாறி விடுகிறது ''என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: கவர்னர் பயந்து மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் கூறியது தவறான கருத்து.
நீட் தேர்வு குறித்து அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு கவர்னர், ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து நிராகரிக்கப்பட்டது. நடக்க முடியாத விஷயத்தை திரும்பவும் அரசியல் ஆதாயத்திற்காக நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என தி.மு.க.,வினர் தேர்தலின் போது கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க., அங்கம் வகிக்கும் போதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தற்போது வேண்டாம் என்று தீர்மானம் கொண்டு வந்து போகாத ஊருக்கு முதல்வர் வழி சொல்கிறார். மொழியை வைத்து அரசியல் செய்கிறார். அவரவர் தாய்மொழி அவரவருக்கு முக்கியம். .எல்லா மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளும் ஒன்றாக இருக்க வேண்டும். நமது நாடு, நமது மொழி, நமது தேசியம் என எல்லோருக்கும் வேண்டும்.அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக சில விஷயங்களை கூறி உள்ளார். தி.மு.க.,வும் ஆதாரப்பூர்வமாக பதில் கூறினால் நன்றாக இருக்கும்.
நேற்று ஒரே நாளில் 8 கொலை நடந்ததுள்ளது. காவல்துறை எங்கும் சரியான முறையில் தனது கடமையை செய்யவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவல்துறை தி.மு.க.,வின் ஏவல் துறையாக மாறி விடுகிறது. இவ்வாறு கூறினார்.