/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தி.மு.க., பிரமுகர் கொலை * 7 பேருக்கு ஆயுள் தி.மு.க., பிரமுகர் கொலை * 7 பேருக்கு ஆயுள்
தி.மு.க., பிரமுகர் கொலை * 7 பேருக்கு ஆயுள்
தி.மு.க., பிரமுகர் கொலை * 7 பேருக்கு ஆயுள்
தி.மு.க., பிரமுகர் கொலை * 7 பேருக்கு ஆயுள்
ADDED : ஜூன் 04, 2025 02:28 AM
திண்டுக்கல்:தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் மாயாண்டி ஜோசப் 60. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி நிர்மலா அடியனுாத்து ஊராட்சி முன்னாள் தலைவர்.
2024 மே மாதம் மாயாண்டி ஜோசப் டூவீலரில் சென்றபோது கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் வழக்கில் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் 39, கென்னடி 37, டேனியல் ராஜா 20, ஸ்டாலின் 20, அலெக்ஸ் பிரிட்டோ 20, இந்திரா காலனியை சேர்ந்த காளீஸ்வரன்19, பிரவீன் குமார்19, இரு சிறுவர்களை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சிறுவர்களை தவிர்த்து 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்து சாரதா தீர்ப்பளித்தார்.