Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வீட்டில் மாடித்தோட்டம்:கமிஷனர் பாராட்டு

வீட்டில் மாடித்தோட்டம்:கமிஷனர் பாராட்டு

வீட்டில் மாடித்தோட்டம்:கமிஷனர் பாராட்டு

வீட்டில் மாடித்தோட்டம்:கமிஷனர் பாராட்டு

ADDED : ஆக 02, 2024 04:56 PM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மக்கும் குப்பையை உரமாக தயாரித்து மாடியில் தோட்டம் அமைத்த தம்பதியை மாநகராட்சி கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

திண்டுக்கல் ரயிலடி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன்,நந்தினி தம்பதியினர். இவர்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் மக்கும்,மக்காத குப்பையை தரம்பிரித்து இதில் மக்கும் குப்பையை அப்படியே உரம் தயாரித்து தங்கள் மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை பயிரிட்டனர். இந்த தோட்டத்தில் இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிக்கப்பட்டது. இந்த தகவலை மாநகராட்சி அலுவலர்கள் கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு தெரியப்படுத்தினர். இந்த தம்பதியை பாராட்டும் விதமாகவும்,மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று சரவணன்,நந்தினி இருவரையும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து கமிஷனர் ரவிச்சந்திரன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

மாநகர நல அலுவலர் டாக்டர் முத்துக்குமார்,சுகாதார ஆய்வாளர் ஸ்டீபன் இளங்கோ ராஜ் பங்கேற்றனர். தொடர்ந்து இதுபோல் நகரில் செயல்படுவோரை கண்டறிந்து அவர்களையும் பாராட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us