ADDED : ஜூன் 02, 2025 12:46 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் லட்சுமி செய்திக் குறிப்பு: எம்.வி.எம்., கல்லுாரியில் 2025-26ம் ஆண்டிற்கான இளங்கலை, இளம் அறிவியலுக்கான மாணவர்களின் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடக்கிறது.
முன்னாள் படை வீரர், தேசிய மாணவர் படை, விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள், பாது காப்புப் படையில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கலந்தாய்வு நாளை (ஜூன் 3) நடக்கிறது. இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு ஜூன் 4, இளநிலை பாடப் பிரிவுகளான வணிகவியல், வணிக நிர்வாகவியல், பொருளியல், வரலாறு ஆகியவற்றுக்கு 5ம் தேதியும், மொழிப் பாடங்களான தமிழ், ஆங்கிலத்துக்கு 6-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.