/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ செம்பட்டி சந்தையில் குவிந்த ஆடுகள் பக்ரீத் பண்டிகையால் விலை அதிகரிப்பு செம்பட்டி சந்தையில் குவிந்த ஆடுகள் பக்ரீத் பண்டிகையால் விலை அதிகரிப்பு
செம்பட்டி சந்தையில் குவிந்த ஆடுகள் பக்ரீத் பண்டிகையால் விலை அதிகரிப்பு
செம்பட்டி சந்தையில் குவிந்த ஆடுகள் பக்ரீத் பண்டிகையால் விலை அதிகரிப்பு
செம்பட்டி சந்தையில் குவிந்த ஆடுகள் பக்ரீத் பண்டிகையால் விலை அதிகரிப்பு
ADDED : ஜூன் 07, 2025 12:35 AM
செம்பட்டி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்பட்டி வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விலை அதிகரித்து விற்பனையாகின.
செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வார சந்தை நடப்பது வழக்கம்.
வழக்கமான மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி ஆடு, மாடு வர்த்தகமும் நடக்கும்.
சுற்று கிராமங்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் ஆடுகள் , அவற்றின் தோல் வாங்குவதற்காக இங்கு குவிவது வழக்கம்.
நேற்று செம்பட்டி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு சுற்று கிராம பகுதிகளில் ஆடு வளர்ப்போர் பக்ரீத் பண்டிகைக்காக அதிகளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட குட்டிகள் முதல் அதிக எடை உள்ள ஆடுகள் வழக்கத்தை விட 30 சதவீதத்திற்கு கூடுதலாக விலை அதிகரித்து விற்பனையாகின.