/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்
தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்
தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்
தெருக்களில் கரைபுரண்டோடும் கழிவுநீர் திண்டுக்கல் 8வது வார்டில் தவியாய் தவிக்கும் மக்கள்

சாக்கடை வசதியற்ற சூழல்
லீலாவதி, குடும்ப தலைவி: வரப்பு உயர நீர் உயரும் என்பது போல் கழிவு நீர் தேக்கம் அதிகரித்தல் என்பது அனைத்து நோய்களுக்குமான மூலதனமாகும். அதன்படியாக பாதாள சாக்கடை பணி கட்டுமான குளறுபடியால் எங்கள் பகுதிக்கு கழிவுநீர் தேக்கமானது நிரந்தரமாகி வருகிறது. வரிகள் முழுமையாக செலுத்தியும் சாக்கடை வசதியற்ற சூழலில் நாங்கள் வாழ்வது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பெரிய பிரச்னையாக உள்ளது.
வாசலில் கரைபுரளும் கழிவுநீர்
பாக்கியலெட்சுமி, குடும்ப தலைவி: வீட்டிற்குள் நுழையும்போதே கழிவு நீரை மிதித்து கொண்டுதான் வர முடியும் என்ற சூழலில் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் எங்கள் பகுதியினர்களுக்கு நோய்தொற்று அதிகரித்துள்ளது. பாதாள சாக்கடை கழிவு நீர் வீட்டு வாசலில் ஓடுவது என்பது எத்தனை ஆபத்தான போக்கு என்பதை உணராமல் அலட்சிய படுத்தி வருகின்றனர். கழிவுநீர் பிரச்னையே எங்கள் பகுதியினர்களின் பிரதான பிரச்னையாக உள்ளது. உடனடியாக தீர்க்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை
சுகுமாரி, குடும்ப தலைவி: தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கழிவு நீர் பிரச்னையில் அல்லாடும் எங்கள் பகுதியானது தெருநாய்களின் ஆதிக்கத்திலும் உள்ளதால் குடியிருப்பாளர்களின் வாழ்வில் சிரமம் மிகவும் அதிகரித்துள்ளது. வாகனத்தில் சிறிது கவனம் சிதறினாலும் தெருநாய்களின் குறுக்கீட்டால் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக் கடைகளை துார்வாருங்க
பாண்டுரங்கன், குடும்பத் தலைவர்: சாக்கடைகளில் மண் அள்ளப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன. பொறுப்பற்ற முறையில் அப்படியே விட்டு சென்றால் கழிவு நீர் தேக்கமானது அதிகரித்து தெருக்களில்தான் ஓடும். மாநகராட்சியின் முதல்கட்ட நடவடிக்கையாக சாக்கடைகளை துார்வாரி கழிவுநீர் வெளியேற பாதை அமைத்து தர வேண்டும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்தொற்றுக்கு ஆளாகி மிகுந்த சிரமப்படுகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஆனந்த், கவுன்சிலர், (தி.மு.க.,): சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகள் துவங்கும். நாயக்கர் புது தெரு நுாற்றாண்டு பள்ளி அருகில் உள்ள புதிய கட்டட ரேசன் கடையானது விரைவில் துவங்கப்பட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.