/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளி மூடப்படும் அபாயம் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளி மூடப்படும் அபாயம் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளி மூடப்படும் அபாயம் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளி மூடப்படும் அபாயம் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளி மூடப்படும் அபாயம் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2025 02:04 AM
நிலக்கோட்டை: விளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி மூடப்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் உடனே நியமிக்க கோரி இப்பகுதியினர் தமிழக முதல்வர், கல்வித் துறைக்கு மனு அனுப்பி இருந்தனர். இந்நிலையில் 5 பட்டதாரி ஆசிரியர்கள் வெளியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உயிரியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளி நிர்வாகம் அந்த பாடப்பிரிவை அகற்ற முடிவு செய்துள்ளது. ஏற்கனவே குரூப் 3, குரூப் 4 ஆகிய எளிமையான பாடங்களை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆசிரியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, அப்பிரிவுகளை நீக்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மா.கம்யூ., ஒன்றிய குழு உறுப்பினர் காசிமாயன் கூறுகையில், கிராமப்புற மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, பள்ளியை மூடும் சூழல் உருவாகிறது. எனவே, உயிரியல் ஆசிரியரும், காலியான 7 பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை எழுத்தர், இரவு நேர காவலரை நியமித்து பள்ளி மூடப்படுவதை தடுக்க வேண்டும் என்றார்.