ADDED : ஜூன் 16, 2025 02:05 AM
வடமதுரை: வடமதுரை -எரியோடு ரோட்டில் தென்னம்பட்டி, கெச்சானிபட்டி பகுதியில் ரோட்டை கடந்த 2 வயது பெண் மயில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
அவ்வழியே டூவீலரில் வந்தவர் மயிலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
வழியில் இறந்தது. வடமதுரை கால்நடை டாக்டர் ராஜ்குமார் இவ்விரு மயில்களை உடற்கூறு ஆய்வு செய்த பின் அய்யலுார் வனத்துறையினர் புதைத்தனர்.