/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு
அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு
அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு
அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு
ADDED : மார் 28, 2025 02:29 AM

வடமதுரை:திண்டுக்கல்மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் விற்பனை ரூ.2 கோடி அளவிற்கு நடந்தது.
ரம்ஜான் பண்டிகை மார்ச் 31ல் வருவதால் அய்யலுார் சந்தையில் நேற்று ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய சந்தை விறுவிறுப்பாக நடந்து காலை 9:00 மணிக்குள் முடிந்தது. சந்தை வளாகம் மட்டுமின்றி திண்டுக்கல் திசை சர்வீஸ் ரோட்டிலும் வியாபாரம் நடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது .
வியாபாரிகள் கூறுகையில் 'நாட்டுக்கோழி (உயிர் எடை) கிலோ ரூ.450, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் கிலோ ரூ.800 என்ற அளவில் விற்றது. மொத்த விற்பனை ரூ.2 கோடியை தாண்டும்' என்றனர்.