/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எங்கிருந்தாலும் பொதுசேவை மையத்தில் 'அக்ரி ஸ்டேக்' பதிவு இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென்பதால் வழிவகை எங்கிருந்தாலும் பொதுசேவை மையத்தில் 'அக்ரி ஸ்டேக்' பதிவு இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென்பதால் வழிவகை
எங்கிருந்தாலும் பொதுசேவை மையத்தில் 'அக்ரி ஸ்டேக்' பதிவு இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென்பதால் வழிவகை
எங்கிருந்தாலும் பொதுசேவை மையத்தில் 'அக்ரி ஸ்டேக்' பதிவு இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென்பதால் வழிவகை
எங்கிருந்தாலும் பொதுசேவை மையத்தில் 'அக்ரி ஸ்டேக்' பதிவு இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென்பதால் வழிவகை
ADDED : மார் 28, 2025 02:30 AM
திண்டுக்கல்:அக்ரி ஸ்டேக் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய இம்மாதமே கடைசி என்பதால் எங்கு இருந்தாலும் அருகே உள்ள பொதுசேவை மையத்தில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் விவசாயிகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும் 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தின்படி ஆதார் போல் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்படும்.
விவசாயிக்கு சொந்தமான நிலம், அவர் பயன்படுத்திய அரசு திட்டங்கள் உள்ளிட்ட விபரங்கள் ஒரே இடத்தில் சேமிக்கப்படும். நிமிட நேரத்தில் இந்த தகவல்களை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்யலாம். அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான பணிகளை வேளாண்மை, தோட்டக்கலை, மக்கள் நலப் பணியாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வட்டாரங்கள், அந்தந்த ஊராட்சி அலுவலகங்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்கள் மிகவும் குறைவாக உள்ள காரணத்தால் எங்கு இருந்தாலும் அருகில் உள்ள பொதுசேவை மையங்களுக்கு சென்று விபரங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் அதிகாரிகள் கூறியதாவது :
இம்மாத இறுதிக்குக்குள் இந்த விபரங்கள் சேகரிக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுசேவை மையங்களிலும் இதனை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் எங்கு இருந்தாலும் அருகில் உள்ள பொதுசேவை மையத்திற்கு ஆதார் எண், அதில் தரப்பட்ட அலைபேசி, சர்வே நம்பரை சரிபார்ப்பதற்காக சிட்டா போன்றவற்றை எடுத்துச் சென்றால் போதும். விபரம் சேகரிக்கப்பட்டு தனி குறியீட்டு எண் வழங்கப்படும். கூட்டுப்பட்டா கொண்டவர்களுக்கும் இந்த பதிவுகள் எடுத்து கொள்ளப்படுகிறது.
நிலம் தன் பெயரில் உள்ள ஒவ்வொருவருமே இந்த தனிக்குறியீட்டு எண் வைத்துக் கொண்டால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் விவசாயம் தொடர்பான எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியும். இந்த பதிவுகளை மேற்கொள்ளாவிட்டால் பி.எம்., கிசான் பயனாளிகளாய் இருந்தால் அதற்கான தொகை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது என்றனர்.