ADDED : மே 17, 2025 01:45 AM
வடமதுரை: ஜங்கால்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் 28, கன்னியாகுமரி ஷாலினி 26 ,மற்றொரு ஜோடி மதுரை சிட்டுப்பட்டி தனியார் நிறுவன ஊழியர் சரவணன் 34, ஆத்துார் அய்யம்பாளையம் திவ்யபாரதி 33. இவ்விரு ஜோடிகளும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பால்
வீட்டினருக்கு தெரியாமல் திருமணம் முடித்து கொண்டு பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பினர்.