/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அடிப்படை வசதிகளின்றி அகதி வாழ்க்கை அம்பாத்துறை ஊராட்சியில் நீடிக்கும் அவதி அடிப்படை வசதிகளின்றி அகதி வாழ்க்கை அம்பாத்துறை ஊராட்சியில் நீடிக்கும் அவதி
அடிப்படை வசதிகளின்றி அகதி வாழ்க்கை அம்பாத்துறை ஊராட்சியில் நீடிக்கும் அவதி
அடிப்படை வசதிகளின்றி அகதி வாழ்க்கை அம்பாத்துறை ஊராட்சியில் நீடிக்கும் அவதி
அடிப்படை வசதிகளின்றி அகதி வாழ்க்கை அம்பாத்துறை ஊராட்சியில் நீடிக்கும் அவதி

சகதியால் தவிப்பு
சிங்கராஜ் ,கூலித்தொழிலாளி, இந்திரா நகர் : குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ரோடு வசதி ஏற்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. சாரல் மழை பெய்தால் கூட சகதிக்காடாக மாறி பலர் தடுமாறி கீழே விழும் அவல நிலை நீடிக்கிறது. இப்பகுதியினர் சொந்த செலவில் மண் மூலம் மேடு பள்ளங்களை நிரவல் செய்துள்ள சூழலில் உள்ளாட்சி நிர்வாகம் குறைந்தபட்சம் பேவர் பிளாக் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தண்ணீர் தட்டுப்பாடு
பாக்கியம், குடும்பத்தலைவி, சலவை தொழிலாளர் குடியிருப்பு : போதிய குடிநீர் விநியோகம் இல்லை .தெரு குழாய்களில் இரு வாரங்களுக்கு ஒரு முறை குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே சப்ளை நடக்கிறது. சில வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளனர். மேல்நிலை தண்ணீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. 20 ஆண்டுகளாகியும் இப்பகுதியினருக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த வசதிகள் கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது.
--நடவடிக்கை இல்லை
கவிதா ,குடும்பத்தலைவி இந்திரா நகர் : 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்துளைக் கிணறுடன் கூடிய தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக கிடப்பில் விட்டுள்ளனர். அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை .