Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 10ம் வகுப்பில் 93.28 சதவீதம் தேர்ச்சி

10ம் வகுப்பில் 93.28 சதவீதம் தேர்ச்சி

10ம் வகுப்பில் 93.28 சதவீதம் தேர்ச்சி

10ம் வகுப்பில் 93.28 சதவீதம் தேர்ச்சி

ADDED : மே 18, 2025 03:09 AM


Google News
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.28 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 ம் தேதி தொடங்கி ஏப். 15 ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் நேற்று காலை 9:30 மணிக்கு வெளியானது.

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், திண்டுக்கல், பழநி என இரு கல்வி மாவட்டங்களிலுள்ள 349 பள்ளிகளை சேர்ந்த 11,851 மாணவர்கள், 12,299 என 24,150 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர்.

இதில் 10,796 மாணவர்கள், 11,731 மாணவிகள் என 22,527 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 91.10 சதவீதம், மாணவிகள் 95.38 சதவீதம் என 93.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாநில அளவில் தர வரிசைப் பட்டியலைப் பொறுத்தவரையில் 93.28 சதவீத தேர்ச்சியுடன் 26 வது இடத்தை திண்டுக்கல் பிடித்தது. 2024ல் 92.32 சதவீதத்துடன் 22வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் உள்ள 349 பள்ளிகளில் 122 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 48 அரசுப்பள்ளிகள், 12 அரசு உதவிபெறும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள் அடங்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us