/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி
அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி
அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி
அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி
ADDED : செப் 20, 2025 04:29 AM
வடமதுரை: அய்யலுார் மலைப்பகுதிகளில் அடுத்தடுத்து 2 நாட்கள் மழை பெய்ததையடுத்து தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் காட்டு மாடுகள் வருவது நின்றுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
அய்யலுார் மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன. தொடர்ந்து மழை இல்லாத காரணத்தால் வனப்பகுதியில் நீராதாரங்கள் வற்றியதால் காட்டுமாடுகள் நீர் தேடி மலைப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிக்கு வந்தன.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். தற்போது இரு நாட்கள் அடுத்தடுத்து சிறிதளவு மழை பெய்ததால் மலைகளில் ஆங்காங்கே இருக்கும் பாறை குழிகளில் நீர் தேங்கின.
இதனால் நீரை தேடி தரைப்பகுதிக்கு காட்டு மாடுகள் இறங்கி வருவது நின்றுள்ளதால் விவசாயிகள், மக்கள் நிம்மதியடைந்தனர்.