ADDED : செப் 08, 2025 06:07 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமத்தில் அறக்கட்டளை தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்தது. பேராசிரியர் அழகர்சாமி வரவேற்றார்.
ஆடிட்டர் வெங்கட ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ரூ.4.4 லட்சம் கல்வி உதவித்தொகை ஸ்ரீவாசவி தங்கமாளிகை ரவி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்திற்கு ரூ.23 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி தலைவர் சிவராம், ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரம தலைவர் சவாமி நித்ய சத்வானந்தா, பாலமுருகன் கலந்துகொண்டனர்.