/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாநில கால்பந்து கழக தலைவருக்கு பாராட்டு மாநில கால்பந்து கழக தலைவருக்கு பாராட்டு
மாநில கால்பந்து கழக தலைவருக்கு பாராட்டு
மாநில கால்பந்து கழக தலைவருக்கு பாராட்டு
மாநில கால்பந்து கழக தலைவருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 15, 2025 06:43 AM
திண்டுக்கல் : தமிழக கால்பந்து கழக தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்துக்கு திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
தமிழக கால்பந்து கழக புதிய தலைவராக அரசன் குழுமம் சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர். இவருக்கு பள்ளி சார்பாக பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மரிவளன் தலைமை வகித்தார். தாளாளர் மரியநாதன் ,தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பேசினர். மறை மாநிலத்தலைவர் தாமஸ் அமிர்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழக கால்பந்து கழகத்தலைவர் சண்முகம் ஏற்புரையாற்றினார். ஆசிரியர்கள் போஸ்கோ, விகுரா, அசிரியர் சங்கச்செயலாளர் ஜேம்ஸ் பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியர் ஜெரஸ்நாதன், மரிய லுாயிஸ் சேகர், ஜோயல்ராஜ், ஜான்டேவிட், முன்னாள் மாணவர் இயக்கப் பொறுப்பாளர்கள் மரிய ராஜேந்திரன், மைக்கேல் செய்திருந்தனர்.