வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள்/ போலீஸ் செய்திகள்
ADDED : செப் 22, 2025 03:50 AM
நெய்காரப்பட்டி: ஆர்.ஆர். மில் பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த விக்னேஷ் 30 என்பவரை தாலுகா போலீசார் கைது செய்தனர். ரூ.22,000 மதிப்புள்ள 18 கிலோ குட்காவை பறிமுதல் செய்யப்பட்டது.
எரியோடு : நல்லமனார்கோட்டையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தனியே துாங்கிய செல்லம்மாளை தாக்கியும், வெள்ளையம்மாள் வீட்டை உடைத்து ரூ.9 ஆயிரம் பணத்தையும் இருவர் கொள்ளையடித்தனர். இதே ஊரில் மேலும் சில வீடுகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் இப்பகுதி மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவு நேரத்தில் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாணார்பட்டி: வி.டி.பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையா 45. இவரது மகன் ரமேஷ் 21. நேற்று காலை அவரது பெற்றோரிடம் சண்டையிட்டுள்ளார். இதை கண்டித்த அவரது தந்தை பொன்னையாவை ரமேஷ் கட்டையால் தாக்கியதில் உயிரிழந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.