ADDED : மே 31, 2025 12:57 AM
வடமதுரை:ஆலம்பட்டி விபத்தில் சிக்கிய விவசாயி இறந்ததையடுத்து மோதிய வாகனத்தை கண்டறிய வலியுறுத்தி உறவினர்கள், கிராம மக்கள் வடமதுரையில் ரோடு மறியல் செய்தனர்.
செங்குறிச்சி ஆலம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள் 60. மே 20 காலை அங்குள்ள ரோட்டில் டீக்கடைக்கு நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெருமாள் நேற்று முன்தினம் இரவு இறந்தார். மோதிய வாகனத்தை கண்டறிய வலியுறுத்தி வடமதுரை அருகில் மூன்று சந்திப்பு பகுதியில் ரோடு மறியல் செய்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு மணி போராட்டம் முடிவுக்கு வந்தது.