/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
ADDED : ஜூன் 01, 2025 12:20 AM
கள்ளிமந்தையம்:தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு சமுதாயத்தினர் முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் தலைமையில் கள்ளிமந்தையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது: கள்ளிமந்தையம் ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் அருந்ததியர் உட்பட 18 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
சில நாட்களாக சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அருந்ததிய சமுதாய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளம், சுவரொட்டிகள் மூலம் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
கலெக்டர், பழநி ஆர்.டி.ஓ., க்கும் இம்மனுவை அனுப்பி உள்ளனர்.