/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெருமாள்கோவில்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெருமாள்கோவில்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பெருமாள்கோவில்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பெருமாள்கோவில்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பெருமாள்கோவில்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மே 26, 2025 02:54 AM

கோபால்பட்டி,: கோபால்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி காளியம்மன், கன்னிமூல கணபதி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் ராமேஸ்வரம், திருச்செந்தூர், அழகர் கோவில், திருமலைக்கேணி, கொடுமுடி உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டது.
மேட்டுக்கடை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் கணபதி யாகம், மஹா சங்கல்பம் வாஸ்து சாந்தி, பூர்ணாஹுதி உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.
மதுரை ஆதினம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அ.தி.மு.க., ஜெ., பேரவை இணைச் செயலாளர் கண்ணன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆண்டிச்சாமி கலந்து கொண்டனர்.