/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தெருநாய் தொல்லையால் பழநி 25வது வார்டு மக்கள் அவதி தெருநாய் தொல்லையால் பழநி 25வது வார்டு மக்கள் அவதி
தெருநாய் தொல்லையால் பழநி 25வது வார்டு மக்கள் அவதி
தெருநாய் தொல்லையால் பழநி 25வது வார்டு மக்கள் அவதி
தெருநாய் தொல்லையால் பழநி 25வது வார்டு மக்கள் அவதி
ADDED : செப் 11, 2025 06:55 AM

பழநி : சூளைமேட்டு தெரு,தம்புரான் தோட்டம், கோட்டைமேட்டு தெரு, அன்சாரி வீதி, எருமைக்கார தெரு, காமராஜர் வீதி, காந்தி மார்க்கெட் ரோடு, பட்டத்து விநாயகர் கோவில் ரோடை உள்ளடக்கிய பழநி 25 வது வார்டில் தெருநாய்கள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
சாலைகள் சேதம் ஆஷிக் ராஜா, டீக்கடை உரிமையாளர் : கோட்டைமேடு தெருவில் குடிநீர் முறையாக வருவதில்லை. சாக்கடைகளை துார் வாருவதில்லை. கொசு தொல்லை அதிகரித்து நோய் ஏற்படும் சூழல் உருவாகிறது. சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அச்சத்தில் நோயாளிகள் கோபி, கடை ஊழியர்: தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது . சில நாட்களுக்கு முன்பு மூன்று வயது குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறின. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் . இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதால் பழநி பகுதியிலிருந்து அனைவரும் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்கு தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளதால் நோயாளிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பணியாளர்கள் வருகை குறைந்தது ஜன்னத்துல் பிர்தோஸ், கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : பாதாள சாக்கடை திட்டத்தை மக்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி விரைவில் முடிக்க வேண்டும். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவது தவிர்க்கப்படும்.
மூன்று வயது குழந்தையை நாய் கடித்தது வேதனைக்குரிய விஷயம். நகராட்சி கமிஷனருக்கு மனு அளித்துள்ளோம். நாய்களுக்கு கருத்தடை செய்யவும் தடுப்பூசி செலுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம். சுகாதார பணியாளர்கள் தட்டுப்பாட்டில் உள்ளதால் வார்டு பகுதியில் சுகாதார பணியாளர்கள் வருவது குறைந்துள்ளது.