/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மக்களே உஷார்: போலி பரிசு கூப்பன் அனுப்பி நூதன மோசடி: ஏமாறுவோர் புகார் அளிக்காததால் அதிகரிப்புமக்களே உஷார்: போலி பரிசு கூப்பன் அனுப்பி நூதன மோசடி: ஏமாறுவோர் புகார் அளிக்காததால் அதிகரிப்பு
மக்களே உஷார்: போலி பரிசு கூப்பன் அனுப்பி நூதன மோசடி: ஏமாறுவோர் புகார் அளிக்காததால் அதிகரிப்பு
மக்களே உஷார்: போலி பரிசு கூப்பன் அனுப்பி நூதன மோசடி: ஏமாறுவோர் புகார் அளிக்காததால் அதிகரிப்பு
மக்களே உஷார்: போலி பரிசு கூப்பன் அனுப்பி நூதன மோசடி: ஏமாறுவோர் புகார் அளிக்காததால் அதிகரிப்பு
ADDED : ஜன 25, 2024 05:37 AM

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் பணம் கையில் புழங்குவதைக் காட்டிலும் இணைய வழி பரிமாற்றம் அதிமாகி வருகிறது.அதற்கேற்றாற்போல் பல நிறுவனங்கள் கியூ.ஆர். கோடு செயலிகள் என பல்வேறு வகைகளில் பணம் பரிமாற்றம் செய்ய செயலிகளை உருவாக்கி வருகின்றன.
இதேபோல் ஆடைகள், அலைபேசி , வீட்டு உபயோக பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை மக்கள் நேரடியாக கடைக்குச் சென்று வாங்குவதை தவிர்த்து, பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கி உள்ள செயலிகள் மூலம் ஆர்டர் செய்து பொருட்களை தங்கள் வீட்டுக்கே வரவழைத்து வாங்குவது அதிகரித்துள்ளது.
இது மக்களின் நேரம் , செலவினங்களை குறைக்கும் ஒரு நல்ல நோக்கத்தில் செயல்பட்டாலும் கூட இதனால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதுபோன்று பொருட்களை வாங்க செயலிகளில் நாம் பதிவிடும் நமது முகவரி, அலைபேசி எண் திருடப்பட்டு தவறான நபர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்த முகவரிக்கு பொருட்கள் வாங்கும் நிறுவனத்தின் மூலம் வீட்டுக்கே தபால் அலுவலகம் மூலம் பரிசு கூப்பன் , கடிதங்கள் வருகிறது.
இதில் விலை உயர்ந்த கார் , பைக், பல லட்சங்கள் ரொக்க பணம் பரிசாக விழுந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கண்டு மகிழ்ச்சியில் குதிக்கும் வாடிக்கையாளர் உடனடியாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளகின்றனர். அதில் பேசும் நபர் , வாழ்த்துக்கள் கூறியப்படி உங்களுக்கு முதல் பரிசாக கார் விழுந்துள்ளது. அதை நீங்கள் பெற குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும் அதை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பினால் விலை உயர்ந்த பரிசு உங்களுக்கு கிடைக்கும் என கூறுகிறார்.
இதை நம்பி சிலர் பல ஆயிரங்களை அனுப்பி ஏமாறுகின்றனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் போலீசில் புகார் அளிப்பதில்லை. ஏமாறுபவர்களை கண்டறிந்து இதுபோன்று செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மீது சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.