Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 20 லட்சம் மரங்களுடன் குறுவனமாக மாறும் ஒட்டன்சத்திரம்

20 லட்சம் மரங்களுடன் குறுவனமாக மாறும் ஒட்டன்சத்திரம்

20 லட்சம் மரங்களுடன் குறுவனமாக மாறும் ஒட்டன்சத்திரம்

20 லட்சம் மரங்களுடன் குறுவனமாக மாறும் ஒட்டன்சத்திரம்

ADDED : ஜன 08, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை போர்த்திய குறு வனமாக மாறி வருகிறது .

ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ., வான அமைச்சர் சக்கரபாணி பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடும் முயற்சியை ஊக்குவித்து வருகிறார். தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி , பேரூராட்சி, நகராட்சி பகுதி அரசு நிலங்கள், ரோட்டோரம் , காலியிடங்கள் கண்டறிந்து மரங்களை நட்டு பராமரிக்கப்படுகிறது. இடையகோட்டையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கரில் 4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இதன் காரணமாக இரு ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது மரங்களாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.

இதன் மூலம் மழை மேகங்களை இழுத்து மழைப்பொழிவு அதிகம் பெய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பசுஞ்சோலையாக மாறும்


கா. பொன்ராஜ்,தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க., செயலாளர்: தொகுதியில் இதுவரை 20 லட்சத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இவற்றை நடுவதுடன் மட்டுமின்றி தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டும் வருகிறது. அமைச்சர் சக்கரபாணியின் ஆலோசனைப்படி அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. தொகுதி முழுவதையும் பசுமை நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்பது அவரது லட்சியம். இதன் மூலம் எதிர்கால சந்ததியினர் மாசில்லாத சுற்றுச்சூழலுடன் வாழ வழிவகுக்கும்.

துாய்மையான காற்று கிடைக்கும்


எஸ்.ஆர்.கே.பாலு, ஒட்டன்சத்திரம் மத்திய தி.மு.க., ஒன்றிய செயலாளர்: மரங்களை நடுவதன் மூலம் காற்றில் உள்ள மாசுக்கள் அகற்றப்பட்டு காற்று துாய்மையாக மாறுகிறது.

இடையகோட்டையில் அமைச்சரின் முயற்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் மூலம் பறவைகள் இனப்பெருக்கம் அதிகரிக்கும். அவை தண்ணீர் குடிக்க பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பொழிவும் அதிகரிக்கும் . தமிழகத்திற்கே முன்மாதிரியாக உள்ள இந்த திட்டத்தை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us