Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாக்காளர்கள் விவரங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவு

 வாக்காளர்கள் விவரங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவு

 வாக்காளர்கள் விவரங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவு

 வாக்காளர்கள் விவரங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவு

ADDED : டிச 02, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: ''வாக்காளர்கள் குறித்த விவரங்களை 100 சதவீதம் மறு ஆய்வு செய்ய உத்தரவிடப் பட்டிருப்பதாக'' திண்டுக்கல் கலெக்டர் சரவணன் கூறினார்.

அவர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் 99 சதவீதம் வழங்கப்பட்டு 80 சதவீதம் திரும்ப பெறப்பட் டுள்ளன.

டிச.11 வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருப்பதால் 2124 ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுடன் அரசியல் கட்சிகளின் முகவர்களும் இணைந்து இறப்பு, நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள், முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள், இரட்டைப் பதிவு வாக்காளர் விவரங்களை 100 சதவீதம் சரி பார்க்க வேண்டும். இடப் பெயர்வு என பதிவு செய்யப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வந்து எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினால் ஏற்று கொள்ளப்படும்.

விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் வரை அவகாசம் உள்ளது.

பழைய தேதியில் வாக்காளர்கள் இல்லாமல் வெளியூர் சென்று இருந்திருந்தால் அவர்களை இடம் பெயர்தல் என்று குறிப்பிட்டிருப்போம். மீண்டும் வந்தால் அந்த கணக்கெடுப்பு படிவத்தை கட்டாயம் பெற்று எடிட் ஆப்ஷன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். சூப்பர் செக் முறையில் மறு ஆய்வு செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறந்த வாக்காளர்கள் பெயர் இருந்தால் அதனை நீக்க அலுவலர்களிடம் உத்தரவிட்டுள்ளோம். இடம் பெயர்ந்த வாக்காளர்கள் குறித்த விவரங்களை 100 சதவீதம் மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us