/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு கூட்டம் பழநியில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு கூட்டம்
பழநியில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு கூட்டம்
பழநியில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு கூட்டம்
பழநியில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : ஜூன் 17, 2025 12:26 AM

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தலைமை அலுவலகத்தில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் நடந்தது.
நீதிபதி பொங்கிப்பன் கூறுகையில், ''பழநி கோயில் நவபாஷாண சிலை பாதுகாப்பது மற்றும் வலுப்படுத்துவது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. வழக்கமான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது,'' என்றார்.
இக்கூட்டத்தில் பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகள், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், பழநி செல்வ சுப்பிரமணியம் குருக்கள், எம்.பி., சச்சிதானந்தம், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, முன்னாள் இணை கமிஷனர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.