ADDED : ஜூன் 16, 2025 05:33 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குணா குகையில் சுற்றுலாப் பயணியின் கைப்பையிலிருந்த பணத்தை குரங்கு தூக்கி எறியும் வீடியோ வைரலராகி வருகிறது.
இங்கு வன சுற்றுலாத்தலமான குணா குகையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளை தூக்கிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியின் கைப்பையில் இருந்த பணத்தை மரத்திலிருந்து தூக்கி வீசுவது போன்ற வீடியோ சில நாட்களாக வைரலாகி வருகிறது.
ரேஞ்சர் செந்தில்குமார் கூறியதாவது: கடந்த மாதம் சுற்றுலா பயணியின் கைப்பையை குரங்கு பறித்துச் சென்றது குறித்து தகவல் வந்தது.
தொடர்ந்து பயணிகள் அனைவரும் குரங்கிடம் கைப்பையை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதன் பின்பு அதை குரங்கு வீசியது என்றார்.