/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நாகம்பட்டி ஊராட்சி மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நாகம்பட்டி ஊராட்சி
மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நாகம்பட்டி ஊராட்சி
மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நாகம்பட்டி ஊராட்சி
மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நாகம்பட்டி ஊராட்சி
ADDED : ஜூன் 24, 2024 04:33 AM
ரோட்டோரங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து சுற்று வட்டார பகுதிகளை பசுமையாக மாற்றுகின்றனர் நாகம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர்.வேடசந்துார் ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சி பகுதியில் நாகம்பட்டி ரோடு, தம்மனம்பட்டி ரோடு, கொன்னாம்பட்டி ரோடு என அனைத்து ரோட்டோரங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமை நிறைந்த சாலைகளாக மாற்றுகின்றனர்.
அது மட்டுமின்றி வேடசந்துார் சேணன்கோட்டை ரோட்டில் 4 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை ஓரே இடத்தில் நடவு செய்து அடர் குறு வனம் அமைத்து பராமரிக்கின்றனர். இங்கு தாண்டி, மலைவேம்பு, மந்தாரை, புங்கன், மகிழம், மூங்கில் வேம்பு உள்ளிட்ட 15 வகை மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்த நிலையில் தற்போது மரங்களாகிவிட்டது. அது மட்டுமின்றி பறவைகள் வந்து கூடு கட்டி வாழும் வகையில் அமைக்கப்பட்ட இந்த அடர் குறு வனத்தில் கொய்யா, பலா, மா, சீதாப்பழம் உள்ளிட்ட பழம் தரும் மரங்களும் வளர்க்கப்படுகிறது. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என அரசு என்னதான் பிரசாரம் செய்தாலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து மரங்களை வளர்ப்பதில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. இது போன்ற ஊராட்சி,பேரூராட்சி நிர்வாகங்கள் கிராமப்புறங்களில் மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினால் தான் தமிழகம் பசுமை நிறைந்த மாநிலமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கான முதற்படியில் தற்போது நாகம்பட்டி ஊராட்சியினர் பயணிக்கின்றனர்.பசுமையாக மாற்றுவது நோக்கம்டி.ராஜம்மாள், ஊராட்சி தலைவர், நாகம்பட்டி: எனது நிர்வாகத்தில் அடர் குறு வனம் துவக்கப்பட்டு ஏராளமான மரக்கன்றுகளை நடவு செய்து முறையாக தண்ணீர் விட்டு பராமரித்து பசுமை நிறைந்த குறு வனமாக மாறி உள்ளது. பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. காக்கை, குருவிகள் கூடு கட்டி பாதுகாப்புடன் வாழுகிறது. உணவுக்கு தேவையான கொய்யா, பலா, சீதாப்பழம், மாம்பழம், மாதுளை உள்ளிட்ட பழ மரங்களையும் வளர்க்கிறோம். அதேபோல் நாகம்பட்டியில் பொதுமக்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கே வருகிற கழிவு நீரைக் கொண்டு 30 தென்னை மரங்கள்,வாழை மரங்கள் வளர்க்கப்படுகிறது. நாகம்பட்டி ஊராட்சியை பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம்.மரம் வளர்க்க ஆர்வம்எஸ்.தங்கவேல், முன்னாள் ஊராட்சி தலைவர், நாகம்பட்டி: கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை வளர்த்து அவை பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை,வேடசந்துார் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை என இரண்டு முக்கிய சாலைகளிலும் நாகம்பட்டி ஊராட்சி பகுதியில் குறுக்காக செல்கிறது. ரோட்டோரங்கள் மற்றும் குக்கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம் என்றார்.