/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சப்வே அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி சப்வே அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
சப்வே அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
சப்வே அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
சப்வே அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

நேரமும் மிச்சமாகும்
இல.சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட்ட போதே சப்வேயை முறைப்படி அமைத்திருக்க வேண்டும். ஆனால் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் இதை கிடப்பில் போட்டுள்ளது. நான்கு வழி சாலை அமைக்கப்பட்ட புதிதில் ஒவ்வொரு பஸ் ஸ்டாப் நிழற்குடை அருகிலேயும் மினி டேங்க் வைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டது. இந்தத் திட்டமும் செயல்பாட்டிற்கு வரவில்லை. காக்கா தோப்பூர் அருகே உள்ள சப்வேயை முறைப்படி அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் வேடசந்துார் நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையும். வாகன ஓட்டிகளுக்கு நேரமும் மிச்சமாகும்.
நேர்வழியில் செல்ல வழி
ஆர்.சிவலிங்கம், ஒன்றிய அ.தி.மு.க., அம்மா பேரவை தலைவர்,வேடசந்துார் :கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்ட பிறகு போக்குவரத்து , வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளது. காக்காத்தோப்பூர் பிரிவு ரோட்டில் மேம்பாலம் இல்லாததால் அடுத்தடுத்து விபத்துகளும், உயிரிழப்புக்களும் தொடர்கின்றன. இந்நிலையில் தற்போதுதான் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் காக்காத்தோப்பூர் பிரிவு அருகே ஒட்டன்சத்திரம் ரோட்டிற்கு செல்வதான சப்வே பணிகள் கிடப்பில் உள்ளன. இந்தப் பணியையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் விபத்துக்கள் குறையும். வாகன ஓட்டிகள் சுற்றி செல்லாமல் நேர்வழியில் செல்வர் என்றார்.