/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.52க்கு விற்பனை முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.52க்கு விற்பனை
முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.52க்கு விற்பனை
முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.52க்கு விற்பனை
முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.52க்கு விற்பனை
ADDED : ஜூன் 01, 2025 10:59 PM

ஒட்டன்சத்திரம்,:வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை ஐந்தே நாட்களில் கிலோ ரூ. 14 அதிகரித்து ரூ.52 க்கு விற்பனை ஆனது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலபட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி,திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், மூலனுார் பகுதிகளில் கரும்பு , செடி முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சமீபத்தில் முன் அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு முருங்கை வரத்து அதிகரித்து கிலோ ரூ.38 க்கு விற்பனை ஆனது. அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வரத்து பாதியாக குறைந்தது. ஐந்து நாட்களுக்கு முன்கிலோ ரூ.38க்கு விற்ற முருங்கை நேற்று முன்தினம் ரூ. 14 அதிகரித்து ரூ.52 க்கு விற்றது.
வியாபாரி ஒருவர் கூறுகையில் இனிவரும் நாட்களில் முருங்கை வரத்து குறையும் வாய்ப்புள்ளதால் விலை அதிகரிக்கும் என்றார்.