Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 22 ஆயிரம் வாக்காளர்கள் ஆத்துார் தொகுதியில் நீக்கம் கலெக்டர், தாசில்தார் மீது அமைச்சர் பெரியசாமி சாடல்

 22 ஆயிரம் வாக்காளர்கள் ஆத்துார் தொகுதியில் நீக்கம் கலெக்டர், தாசில்தார் மீது அமைச்சர் பெரியசாமி சாடல்

 22 ஆயிரம் வாக்காளர்கள் ஆத்துார் தொகுதியில் நீக்கம் கலெக்டர், தாசில்தார் மீது அமைச்சர் பெரியசாமி சாடல்

 22 ஆயிரம் வாக்காளர்கள் ஆத்துார் தொகுதியில் நீக்கம் கலெக்டர், தாசில்தார் மீது அமைச்சர் பெரியசாமி சாடல்

ADDED : டிச 01, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பணி என்ற பெயரில் 22 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இச்சதி கலெக்டர், தாசில்தார் துாண்டுதலில் நடந்துள்ளது,'' என, திண்டுக்கல் தி.மு.க., அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆத்துார் சட்டசபை தொகுதி சின்னாளப்பட்டி பேரூராட்சியில் பெயர் விவரங்கள் சரிபார்ப்பில் ஆயிரக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

26 ஓட்டுச்சாவடிகளில் 7 ஆயிரத்து 227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சின்னாளபட்டியில் மட்டும் மொத்தம் 25 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்களில் 7 ஆயிரத்து 227 பேர் இடம் பெயர்ந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர்.,ல் குறித்துள்ளனர். இதனால் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் தாசில்தார் முத்துமுருகன், கலெக்டர் சரவணன் உள்ளனர்.

நேற்று முன் தினம் காலையில் இருந்து தாசில்தார் முத்துமுருகன் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சென்று பணியில் இருந்த பி.எல்.ஓ.,க்களிடம், 'இனி எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்பி கொண்டு வருபவர்களை 'இடம் மாறுதல்' எனக்குறிப்பிடுங்கள்,' கட்டாயப்படுத்தி எஸ்.ஐ.ஆர்., பணியை விரைந்து முடிக்க அழுத்தம் தந்துள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் மட்டும் மொத்தம் 21 ஆயிரத்து 800 பேரின் ஓட்டுகள் 'இடம் மாறுதல்' எனக்குறிக்கப்பட்டு ஓட்டுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

2016 சட்டசபை தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவானது. தற்போது எஸ்.ஐ.ஆரில் இதுவரை 16 ஆயிரத்து 800 வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

சின்னாளபட்டியில் வசிக்கும் மக்கள் வியாபாரிகள். அவர்கள் பகலில் தொழில்ரீதியாக வெளியூர் சென்று இரவில் தான் வீடு திரும்புவார்கள். எனவே, எஸ்.ஐ.ஆர்., பணியை கடைசி நாள் வரை அதிகாரிகள் பொறுமையாக செய்திருக்க வேண்டும். ஆனால் அவசர, அவசரமாக பணிகள் நிறுத்தப்பட்டதால் நேற்று படிவம் நிரப்பிக்கொண்டு வந்த பலரும் வாக்காளர் பட்டியலில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தேர்தல் கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்துார் தொகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us