Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குழந்தை வேலப்பர் கோயில் கிரிவல பாதையில் 3000 மரக்கன்றுகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

குழந்தை வேலப்பர் கோயில் கிரிவல பாதையில் 3000 மரக்கன்றுகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

குழந்தை வேலப்பர் கோயில் கிரிவல பாதையில் 3000 மரக்கன்றுகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

குழந்தை வேலப்பர் கோயில் கிரிவல பாதையில் 3000 மரக்கன்றுகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

ADDED : ஜூன் 06, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதையில் 3000 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதையில் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தொடங்கி வைத்தும், ஒட்டன்சத்திரம் வனச்சர அலுவலகத்தில் நடந்த தடை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 2024ல் 30 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. 10 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட உள்ளது. ஒட்டன்சத்திரம், பழனி நகராட்சி களில் நமக்கு நாமே திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டை துாய்மையாக பராமரிப்பது போல் சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும் என்றார்.

கலெக்டர் சரவணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, நகராட்சித் தலைவர் திருமலைசாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, செயற்குழு உறுப்பினர் கண்ணன், எவர் கிரீன் சிட்டி கிளப் உறுப்பினர்கள் சரவணன், பொன்கார்த்திக், கிருபாபவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் பாலு கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us