ADDED : செப் 10, 2025 08:13 AM
வேடசந்துார்; வேடசந்துார் முருநெல்லிக்கோட்டையை சேர்ந்தவர் மனோஜ் 22.சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
தனது சொந்த ஊரில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். காதலி பேச மறுத்ததால் ,இதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சக்திமுனியப்பன் தான் என நினைத்த மனோஜ் சக்தி முனியப்பனை வெட்டினார்.
சென்னையில் பதுங்கி இருந்த மனோஜை வேடசந்துார் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.