ADDED : ஜூன் 17, 2025 04:57 AM

ஆயக்குடி : பழநி, ஆயக்குடி பகுதியில் எலுமிச்சை விவசாயிகள் சரியான விலை கிடைக்காத காரணத்தால் எலுமிச்சை பழங்களை குப்பையில் கொட்டினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.100 விற்ற எலுமிச்சை தற்போது அதிகபட்சம் ரூ.50 க்கு மட்டுமே விற்பனை ஆகிறது.
பாதிக்கு பாதி விலை குறைந்ததால் பறிக்கும் கூலி கிடைக்காத நிலையில், எலுமிச்சம் பழங்களை குப்பையில் கொட்டி சென்றனர்.