ADDED : ஜூன் 17, 2025 04:57 AM

திண்டுக்கல் : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கக் கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுகந்தி கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ சிகிச்சைபெறும் என்.ஹெச்.ஐ.எஸ்., திட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முழுமையாக பயன்பெற முடியவில்லை.
2025 ஜூலை முதல் புதுப்பிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அனைவருக்கும் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மகாலிங்கம், மாநிலச் செயலர் ஜெசி கலந்து கொண்டனர்.