ADDED : ஜன 04, 2024 02:55 AM
வடமதுரை; பிலாத்தை சேர்ந்த வழக்கறிஞர் பகவத்சிங். இவரது தாய் சரசுவை உறவினர்களான 4 பேர் தாக்கிய சம்பவத்தில் புகார் தந்தும் வழக்கு பதிய போலீசார் தாமதம் செய்தனர்.
வழக்கறிஞர்கள் சங்கம் வடமதுரை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
சங்க தலைவர் முருகேசன், துணைத் தலைவர் கந்தசாமி, செயலாளர் பாலமுருகன், துணை செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் தெய்வேந்திரன் பங்கேற்றனர்.
இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் பேச்சுவார்த்தையில் வழக்கு பதியப்படும் என தெரிவிக்க கலைந்தனர்.