ADDED : செப் 05, 2025 02:40 AM

நிலக்கோட்டை:தம்பிநாயக்கன்பட்டி வீருசின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி வத்தலக்குண்டு ராகவேந்திரா பிருந்தாவன நிறுவனர் கோபிநாதன் தலைமையில் இரண்டு நாட்கள் யாக வேள்வி பூஜைகள் நடந்தன.
புனித நீர் கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வீர சின்னம்மாளுக்கு சிறப்பு அலங்கார ம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.