ADDED : செப் 05, 2025 02:41 AM
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் தமிழ் துறை வ.உ.சி ஆய்வு வட்டம் சார்பில் வ.உ.சி., -சுப்பிரமணிய சிவா நினைவு அறக்கட்டளை தொடக்க விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். வ.உ.சி., பேரன் சிதம்பரம், பேராசிரியர் ஷாஜி முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் கல்லுாரி முன்னாள் முதல்வர் வெங்கட்ராமன் பேசினார். ஆய்வு வட்ட செயலாளர் குருசாமி மயில்வாகனன் நன்றி கூறினார்.