/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் பிரேக் தரிசன வசதி கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல் பழநியில் பிரேக் தரிசன வசதி கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்
பழநியில் பிரேக் தரிசன வசதி கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்
பழநியில் பிரேக் தரிசன வசதி கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்
பழநியில் பிரேக் தரிசன வசதி கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 15, 2025 01:37 AM
பழநி:பழநி முருகன் கோயிலில் பிரேக் தரிசன வசதி செயல்படுத்த பக்தர்கள் ஜூன் 29க்குள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.
இக்கோயிலில் விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் மாலை 3:00மணி முதல் 4:00 மணி வரை 'பிரேக் தரிசன சேவையை' நடைமுறைப்படுத்த 2024ல் திட்டமிடப்பட்டது. அதற்கான கருத்து பக்தர்களிடம் பெறப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது வரை இச்சேவை அறிமுகப்படுத்தவில்லை.
இந்நிலையில் தற்போது பக்தர் ஒருவருக்கு ரூ. 500 கட்டணம் வீதம் 'பிரேக் தரிசன வசதி' செய்து தர கோயில் நிர்வாகம் முன் வந்துள்ளது.
இது தொடர்பான கருத்தை ஜூன் 29 க்குள் கோயில் அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தரிசனத்தில் பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.