ADDED : மார் 12, 2025 06:25 AM
வேடசந்துார்; நாகையகோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 33.
இவரும் கன்னிவாடி தெத்துபட்டி மாதவன் 40, இருவரும் நேற்று முன்தினம் இரவு வேடசந்தூர் ஆத்துமேடு நால்ரோட்டில் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது முத்துக்கிருஷ்ணன் பாக்கெட்டில் இருந்த பணத்தை மாதவன் எடுக்க முயற்சி செய்ததாக கூறி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் செங்கல்லால் மாதவன், முத்துகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி மாதவனை கைது செய்தார்.