Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்

டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்

டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்

டூவீலர் ஓட்டிகளிடம் செயின், போன் பறிப்பு அதிகரிப்பு; மாட்டுத்தொழுவமாக மாறிய நான்கு வழிச்சாலை சென்டர்மீடியன்

ADDED : ஜன 31, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி : திண்டுக்கல் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போதிய தெருவிளக்கு, போலீஸ் கண்காணிப்பு இல்லாததால், செயின் பறிப்பு வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கவும், போலீசார் வாகன தணிக்கையை அதிகரித்து திருட்டு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

திண்டுக்கல் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2011 முதல் நான்கு வழிச்சாலை செயல்பாட்டிற்கு வந்த பிறகு, வாகன போக்குவரத்திற்கு ஏற்ப இரு புறங்களிலும் ரோடு சந்திப்புகளில் இணைப்பு சாலை, பெருமளவு இடங்களில் மின்விளக்குகள், அனைத்து பஸ் ஸ்டாப்களில் ஹை-டெக் நிழற்கூரை, தண்ணீர் தொட்டி, டோல்கேட் பகுதியில் இருந்து கண்காணிப்பதற்கு ஏற்ப உயர் கோபுர கேமராக்கள், ரோட்டோர சரக்கு வாகன நிறுத்துமிடங்கள், வாகன ஓட்டுனர்களுக்கான ஓய்வறை உட்பட ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. சென்டர் மீடியனில் கண் கவரும் பூச்செடிகள் வளர்ப்பு மூலம் பகலில் அழகுணர்வை ஏற்படுத்துவதுடன் இரவு நேரங்களில் எதிர் திசை வாகனங்களின் விளக்கு ஒளி பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தடுப்பாக அமைத்திருந்தனர். தேவைக்கேற்ப கிராமப்புற பஸ் ஸ்டாப்களில் இரு புறங்களையும் இணைக்கும் சந்திப்பு பகுதி அமைக்கப்பட்டு இருந்தன. இவை வாகன ஓட்டுனர்களுக்கு வசதியை ஏற்படுத்தியது மட்டுமின்றி எதிர்திசை பயணத்தையும் குறைத்திருந்தன.

இருப்பினும் தொடர் பராமரிப்பில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியப்படுத்தி வருகிறது. பெருமளவு வசதிகள் செயலிழந்து பயன்படுத்த முடியாத சூழலில் நிலையில் காட்சி பொருளாக உள்ளன. விபத்துகளை காரணம் கூறி பெரும்பாலான ரோடு சந்திப்புகளை மூடிவிட்டனர். பல கிலோமீட்டர் துாரம் வீண் அலைக்கழிப்பு, எதிர்திசை பயண பிரச்னைகள் நீடிக்கிறது.

பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியம் காட்டி வருகின்றன இருள் சூழ்ந்த நிலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளை குறிவைத்து செயின், அலைபேசி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. நம்பர் பிளேட் இல்லாத, எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் உள்ள இரு சக்கர வாகனங்களில் பின் தொடரும் மர்ம நபர்கள், இது போன்ற செயல்களின் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

கொடைரோடு துவங்கி தோமையார்புரம் வரை சில வாரங்களில் 10க்கு மேற்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ரோந்து, போலீஸ் வாகன தணிக்கையில் அலட்சியம் நிலவுவதாகவும், குற்ற சம்பவங்கள் அதிகரித்த போதும் தடுப்பு நடவடிக்கைகளில் போலீசாரின் தொய்வு நிலவுவதாக புகார் நீடிக்கிறது.

வசூலில் மட்டுமே கவனம்


மனோகரன், பா.ஜ., ஆத்தூர் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர், பெருமாள்கோயில்பட்டி : திண்டுக்கல் கொடைரோடு இடையே போலீசார் ரோந்து செல்கின்றனர். இதனை கவனித்து வழிபறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம கும்பல் தங்களது இடத்தை தேர்வு செய்கின்றனர். கொடைரோடு முதல் தோமையார்புரம் வரை, அம்மையநாயக்கனுார், அம்பாத்துறை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் தாலுகா போலீசாரின் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் முறையான வாகன தணிக்கை நடைபெறுவதில்லை.

வசூலை குறிவைத்து மட்டுமே தணிக்கை பணிகள் நடப்பதாக புகார்கள் நீடிக்கிறது. போலீசார் கண்காணிப்பு இல்லாத சூழலை பயன்படுத்தி இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தனி நபராகவோ மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களாகவோ இணைந்து இரு சக்கர வாகனங்களில் வருவோரை துரத்திச் சென்று செயின், அலைபேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நம்பர் பிளேட் இல்லாத தெளிவற்ற எண்கள் கொண்ட இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தி இது போன்ற சம்பவங்களை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் பெண்களை குறி வைத்து அதிக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட போலீசாரும் முழுமையான வாகன தணிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

---கண்காணிப்பு கேமரா தேவை


துரைப்பாண்டி,டிராவல்ஸ் உரிமையாளர், சின்னாளபட்டி : திண்டுக்கல்-மதுரை ரோட்டில் சமீபகாலமாக செயின், அலைபேசி சம்பவங்களில் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்ணாமலையார் மில்ஸ், கலிக்கம்பட்டி விலக்கு, சின்னாளபட்டி, அம்பாத்துறை ரோடு, காமலாபுரம், சிறுநாயக்கன்பட்டி விலக்கு, காபிகடை உள்ளிட்ட இணைப்பு சாலைகளை பயன்படுத்தி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் தப்பி விடுகின்றனர். இச்சம்பவங்கள் தொடர்பான உடனடி தகவல்களை தெரிவிக்கும் வகையில் ரோடு சந்திப்புகள் விழிப்புணர்வு பலகைகள் அமைக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. இவை குற்றச் செயல்களில் ஈடுபடுபவருக்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. போலீஸ், நெடுஞ்சாலை ஆணையம் துறையினர் சார்பில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும். பகல், நள்ளிரவு நேரங்களில் ரோந்து, வாகன தணிக்கையில் கடும் தொய்வு நிலவுகிறது. ஏ.வெள்ளோடு, காந்திகிராமம், செட்டியபட்டி, கலிக்கம்பட்டி, அம்பாத்துறை, ஜம்புதுரைக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகள், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் மெயின் ரோடுகள் சந்திப்புகளில் உள்ள தெருவிளக்குகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இருளால் அவதி


பூங்காவனம், குடும்பத்தலைவி, சின்னாளபட்டி:

காந்திகிராமத்தில் போதிய தெருவிளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்த பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ளது.

மாலை நேரங்களில் மாணவியர், மகளிர் ஊழியர்கள் இங்கு பஸ்சுக்காக காத்திருப்பதில் பல நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இப்பகுதியில் காத்திருக்கும் பயணிகளுக்க நிழற்கூரை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும பெயரளவில் கூட இல்லை. திண்டுக்கல்-மதுரை ரோட்டில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் சந்திப்பு பகுதிகள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளன. பெண்கள், முதியோர், கைக்குழந்தைகளுடன் காத்திருப்போர் அவதிக்குள்ளாகின்றனர். காந்திகிராமம் அருகே சின்னாளபட்டி பகுதியின் அதிக வாகன போக்குவரத்து வழித்தடமான பைபாஸ் சந்திப்பு மூடப்பட்டு உள்ளது. சின்னாளபட்டி மேம்பாலம் வரை கூடுதலாக 4 கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. பல்வேறு தரப்பினரும் ஆட்சேபணை தெரிவித்தபோதும் திறக்க நடவடிக்கை இல்லை.

இந்த வழித்தடத்தின் பெரும்பாலான சந்திப்புகளை போலீசார் விபத்து காரணங்களை கூறி மூடிவிட்டனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரோட்டை அகலப்படுத்தி விபத்துகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை போக்குவரத்திற்கு திறந்து விடுவதால் எதிர் திசை பயண விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us