/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வது அதிகரிப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவைஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வது அதிகரிப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வது அதிகரிப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வது அதிகரிப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வது அதிகரிப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 17, 2024 01:12 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்டோக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு ஆட்டோக்கள் முக்கிய காரணங்களாக உள்ளது. விதிமீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரால் போக்குவரத்து நெரிசல் மட்டுமில்லாமல் சிறு விபத்துகளும் ஏற்படுகிறது.
கூட்டமான இடங்களில் கூட வேகத்தை குறைக்காமல் பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் திருப்புதல் செய்கை,இன்டிகேட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல் திருப்புதல், போன்ற செயல்களால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றனர். விதி மீறலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் பாதிக்கப்படும் வாகன ஓட்டுநர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர்.
பள்ளி திறந்து செயல்படும் நிலையில் பள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். ஆட்டோவில் பயணிக்கும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் அனுப்பும் பெற்றோர்கள் குழந்தைகள் செல்லும் ஆட்டோவில் பயணிக்கும் நபர்களுக்கு எண்ணிக்கை குழந்தைகள் அமருமிடம் ஆகியவை குறித்து கண்காணிக்க வேண்டும் போலீசார் அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.