/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒட்டன்சத்திரத்தில் வெறிச்சோடிய மாட்டுச்சந்தை ஒட்டன்சத்திரத்தில் வெறிச்சோடிய மாட்டுச்சந்தை
ஒட்டன்சத்திரத்தில் வெறிச்சோடிய மாட்டுச்சந்தை
ஒட்டன்சத்திரத்தில் வெறிச்சோடிய மாட்டுச்சந்தை
ஒட்டன்சத்திரத்தில் வெறிச்சோடிய மாட்டுச்சந்தை
ADDED : ஜூன் 17, 2024 12:38 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி மாட்டுச்சந்தை வாரம் ஒரு ஞாயிறு மாலை தொடங்கி அடுத்த நாள் காலை வரை இயங்கும். திண்டுக்கல்,தேனி,திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மாடுகளை கேரள வியாபாரிகளும், விவசாயிகளும் வாங்கி செல்கின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் மாடுகளை வாங்க வரவில்லை.
மாடுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்த போதிலும் மாடுகளின் விலை பாதியாக குறைந்தது. 700 மாடுகள் விற்பனைக்கு வரும் நிலையில் 400 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.