/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருப்பணி பெயரில் கையாடல் புகார் சிலை திருட்டு தடுப்பு பிரிவு விசாரணை திருப்பணி பெயரில் கையாடல் புகார் சிலை திருட்டு தடுப்பு பிரிவு விசாரணை
திருப்பணி பெயரில் கையாடல் புகார் சிலை திருட்டு தடுப்பு பிரிவு விசாரணை
திருப்பணி பெயரில் கையாடல் புகார் சிலை திருட்டு தடுப்பு பிரிவு விசாரணை
திருப்பணி பெயரில் கையாடல் புகார் சிலை திருட்டு தடுப்பு பிரிவு விசாரணை
ADDED : ஜூன் 08, 2025 01:28 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் திருப்பணி பெயரில் திருட்டு பணி நடந்ததாக புகார் அளித்த ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், அன்றைய கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட சிலரிடம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் - காளகஸ்தீஸ்வரர் கோயிலில் மயில் மண்டபம், துாண்கள், ஞானதண்டாயுதபாணி திருமேனி கோயிலிருந்து அகற்றப்பட்டதாகவும், 2016 லிருந்து திருப்பணி என்ற பெயரில் கையாடல் நடந்திருப்பதாகவும் ராம ரவிக்குமார் ஏப். 30 ல் திண்டுக்கல் சிலை திருட்டு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.
இதைதொடர்ந்து நேற்று ஆஜராகுமாறு அவருக்கு சிலை திருட்டு தடுப்பு பிரிவு அழைப்பாணை கொடுத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா முன்பு ஆஜரான ராமரவிக்குமார் புகார் குறித்த விவரங்கள், ஆவணங்கள், புகைப்படங்களை அளித்து விளக்கம் அளித்தார். போலீசார் அதனை பதிவு செய்து கொண்டனர்.
அன்றைய அபிராமி அம்மன் கோயில் செயல்அலுவலரும் தற்போது ஸ்ரீரங்கம் கோயில் உதவி கமிஷனருமான வேல்முருகனும் ஆஜராகி விளக்கமளித்தார்.