ADDED : ஜூன் 12, 2025 02:30 AM
வேடசந்துர்: நாகையகோட்டை ஒத்தக்கடையை சேர்ந்தவர் கார்மென்ட்ஸ் தொழிலாளி விஜயராகவன் 30.
இவரது மனைவி விசித்திரா 25. நேற்று விஜயராகவனுக்கு பிறந்தநாள் என்பதால் கறி வாங்கி கொண்டு டூவீலரில் எரியோடு ஒத்தக்கடை நோக்கி சென்றபோது எதிரே வந்த டூவீலர் மோதியதில் விஜயராகவன் இறந்தார்.
அவரது உடலை எரியோடு போலீசார் வேடசந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வந்த விஜயராகவனின் உறவினர் ஒருவர் இரும்பு கம்பியால் மருத்துவ மனை பிரசவ வார்டு கண்ணாடியை அடித்து உடைத்தார். வேடசந்துார் போலீசார் தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்தனர்.